மக்களை சதுரங்க விளையாட்டு காய்களாக நினைத்து
விளையாடிய இந்திய, திராவிட அரசியல்
வியாதிகளின் விளையாட்டே இந்த வன்முறை
இந்தியா:-
மக்களுக்கான
உரிமைகளை மிதவாத முறையில், தமிழர்கள் போராடி பெறுவதை இந்திய (மோடி) அரசு விரும்பவில்லை.
.
கிருத்துவர்கள், இசுலாமியர்கள் தமிழினம் என்ற ஓர்மையோடு போராடிய தை,இந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் விரும்பவில்லை..இது அவர்களது பிரிவினைவாத கொள்கைகளுக்கு எதிராக இருந்தது.
.
போராட்ட களத்தில் எழுந்த மோடிக்கு எதிரான
கருத்துக்கள், தமிழகத்தில் கால் பதிக்க நினைத்த பா,ச.க வின் கனவை தகர்த்தது. .
சசிகாலா-நடராசன்:-
தீபாவின் அரசியல் வருகையையும், ஊடகத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியதுவத்தையும் குறைப்பது.,
முதல்வரால் சட்டம்
ஒழுங்கை கட்டுபடுத்த முடியவில்லை என்று கூறி சசிகலா நடராசனை அடுத்த முதல்வராக பதவி ஏற்க வைப்பது.
.
பன்னீர் செல்வத்தின் மக்கள் செல்வாக்கை
மட்டுபடுத்த ஏற்படுத்தப்பட்ட நடவக்கை.
தமிழகத்தில் பா.ச.க மற்றும் மோடியின் செல்வாக்கை குறைப்பது.
ஒ.பி பன்னீர் செல்வம்:-
மாணவர் போராட்டத்தை பயன்படுத்தி தனது செல்வாக்கை அதிகரிக்க செய்ய பன்னீர் செல்வம் எடுத்த முயற்சி.
மோடியின்அ ஆதரவுடன் அதிமுக வை உடைத்து பாஜகவுடன்
கூட்டணி அமைப்பது. .
திமுக:-
சட்ட ஒழுங்கு சிக்கல் ஏற்பட்டு, அதன் மூலம் ஆட்சி
கலைந்து அல்லது மக்களுக்கு வெறுப்பு
ஏற்பட்டு அதன் பலனை பயன்படுத்த முயற்சித்ததின் விளைவு .
மெரீனா
மெரினாவில் ஞாயிறு இரவு பத்து மணியளவில் ஆர்.எஸ்.எஸ்
குழு ஒன்று இந்திய கொடியுடன் வெளிப்படையாக
உள் நுழைந்தது .அதுவரை மறைமுகமாக மட்டுமே அவர்கள் மக்களுடன் கலந்திருந்தனர்.
.
நாம் எழுப்பிய அனைத்து முழகங்களையும்அவர்களும் எழுப்பினர். நடு நடுவே "பாரத்மாதாகி ஜே,. நாமெல்லாம் இந்தியர்கள்,. இந்தியா
வாழ்க" என்றெல்லாம் கூவி அவர்களை அவர்களே அடையாளப் படுத்திக் கொண்டனர்.
.
இந்திய கொடியை அங்கிருந்தவர்களின் சட்டையில் குத்தி விட்டனர். நம்மிடத்திலும் வந்தனர் நன்றாக
திட்டி அனுப்பினோம். அதற்கு அவர்களு க்கு தலைமை தாங்கிய ஒருவர் (தனி மனித துப்பாக்கி
பாதுகாப்பு வேறு அவருக்கு கொடுக்கப் பட்டிருந்தது )விடியற்காலை நான்கு மணி வரை
தான் இவர்கள் ஆட்டமெல்லாம் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி நம்மிடத்தை
விட்டு நகர்ந்தனர்.அவரோடு இணைந்து அக்
கூட்டமும் நகர்ந்து.அப்பொழுதான் நமக்கு புரிந்தது நாளை உறுதியாக ஏதோ நடக்க போகிறது என்று அதுவரை கூட்டத்தை கலைக்க வாய்ப்பு உள்ளது என்ற கணிப்பில் மட்டுமே இருந்தோம்..
பின்பு அவர்கள், குடிசை மாற்று வாரியம் அருகே நடந்து கொண்டிருந்த
கூட்டத்திற்கு அருகே சென்றனர் அதை கண்ட அதன் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் சுரேஷ்
என்று நினைக்கிறேன் அவர் ஒலிபெருக்கியில் மக்களே, உங்கள் உடை மைகளை பாதுகாப்பாக
வைத்துக் கொள்ளுங்கள்.ஆண்கள் அனைவரும் உங்கள் பையில், கையில் உள்ள பணப் பைகளை
அவ்வப்போது இருக்கிறதா என்று ஆய்வு செய்து கொள்ளுங்கள்.
பெண்கள் தங்கள்
கழுத்தில் அணிந்ந்திருக்கும் நகைகளை இருக்க பிடித்துக் கொள்ளுங்கள்.உங்கள் ஆடைகளை
சரி செய்து கொள்ளுங்கள். துப்பட்டாவை சரியாக போர்த்தி கொள்ளுங்கள். உங்கள் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் அருகில் இருந்தால் அவர்களோடு இணைந்து கொள்ளுங்கள். .உங்களிடம் எங்களை போன்று நட்போடு பேச கொடியுடன் சிலர் வருவார்கள், நல்லவர்கள் போல பேசுவார்கள்,பாலியல்
தொல்லை கொடுத்து உங்களை வம்பிற்கு இழுப்பார்கள்,கலவரம் ஏற்படுத்த முனைவார்கள்..
நச்சு கருத்துக்களை திணிப்பார்கள் அவர்களை நம்ப வேண்டாம் என்று தொடர்ச்சியாக
கூறியதை கேட்ட அந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அவ்விடத்தை விட்டு அகன்றது.
.
அடுத்து நாம் ஆங்காங்கே போராட்டம் நடந்து
கொண்டிருந்த இடங்களை நோக்கி பயணித்தோம். அங்கங்கே சில பேர் நம் கருத்துக்கு ஒவ்வாத
வகையில் திரிந்து கொண்டிருந்ததை காண முடிந்தது..நாம் சந்தேக கண்ணோடு நோக்குவதை கண்டதும் சற்றே
இடம் நகர்ந்தனர்.
அவ்விடத்தில் இருந்த மக்கள் கூட்டத்தை பற்றி அவர்கள்யாருக்கோ உளவு சொல்வது போல அவர்கள் நடவடிக்கை இருந்தது.அடுத்து சிறிது இடைவெளியில் மக்கள் அதிகார அமைப்பை
சார்ந்த கோவன் மற்றும் பலர் பாடல்களை பாடி மக்களை உற்சாகப்படுத்தி கொண்டிருந்தனர் அங்கு சிறிதளவு கூட்டம் இருந்தது..
அங்கிருந்து சிறிது இடைவெளியில், விவேகானதர்
பண்பாட்டு இல்லம் அருகே மாணவர் அமைப்பினர் உரையாற்றிக் கொண்டிருந்தனர்.அங்கிரு ந்த மாணவர் சிலர் புதியதலைமுறையில் மெரினாவில் கூட்டம் கலைந்து சென்று விட்டதாக ஒளிபரப்புகிறார்கள், இதற்கு
என்ன பொருள் என்று என்று வினா எழுப்பினர்.
அதற்கு தலைமையேற்பாளர்கள் சிறிது அமைதியாக
இருங்கள் நாங்கள் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம் என்று விடையளித்து விட்டு அங்கு
கூடியிருந்த மக்களை பார்த்து உங்கள் அலைபேசியில் உள்ள விளக்கை இயக்குமாறு
வேண்டுகோள் விடுத்தனர் .இது ஒவ்வொரு மணி நேர இடைவெளிக்கும் இந் நிகழ்வு நடந்தது.அது மக்கள் கூடியிருப்பதை ஒளிபரப்பவே என்பதை பிற்பாடு உணர முடிந்தது.
.
சில மணி நேரத்திற்கு பிறகு மாணவ அமைப்பினர் நாம் இங்கிருப்பதை நியூஸ் செவென் ஒளிபரப்பி விட்டதாகவும் அதனால் நாம் போராடி கொண்டிருக்கும் செய்தி உலக
மக்களுக்கு தெரிந்து விட்டது. அதனால் கவலை கொள்ள வேண்டியதில்லை என்று கூறி நம்பிக்கையளித்து
அதுவரை தொய்வடைந்திருந்த உரை வீச்சு மீண்டும் வீறு கொண்டது..
“இப் ஆப் தமிழா ஆதி” அரசு பக்கம் சென்று
விட்டதாக செய்தி வந்ததை அடுத்து சிறிது தொய்வு ஏற்பட்டது..மேலும் காவற்துறை தடியடி
மற்றும் கண்ணீர் புகை,தண்ணீரை பீய்ச்சி அடிக்கலாம் என்ற செய்தி ஓரளவிற்கு
பேச்சளவில் மாணவரிடையே பரவி இருந்ததை காண முடிந்தது .நேரம் கூட கூட மெல்லிய அச்ச
உணர்வு எழுந்ததையும் உணர முடிந்தது.
.
அடுத்து இப் ஆப் தமிழா ஆதியின் சல்லிகட்டு ஒளிப்படம்
ஒளிபரப்பாகி கொண்டிருந்த இடத்தில் சிறிதளவு கூட்டம் அப் படத்தை பார்த்துக் ரசித்து கொண்டிருந்தனர் .
அவர்களை அடுத்து பொதுவுடைமை சிந்தனை உடைய
மாணவர்கள் (அமைப்பு) சில நூறு பேர் கூடியிருந்தனர் அங்கும் உரை வீச்சு நடந்து
கொண்டு இருந்தது.
ஒட்டு மொத்தமாக கணக்கீடு செய்தாலும்
விடியற்காலையில் இருந்த மாணவர்கள் மற்றும் பொது மக்களின் எண்ணிக்கை சற்றேறக் குறைய
ஈராயிரம் பேர் இருந்திருக்க கூடும்.
பெரியார் கட்டிடம் அருகே ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த
கார்த்திக் சுரேசு தனக்கு நெருங்கிய பற்றாளர் முக்கிய தகவலை தெரிவித்ததாக கூறி,தமிழக
அரசு நம் போராட்டத்தை இன்றே கலைக்க முடிவெடுத்து விட்டதாகவும் அதனால் நாம் எத்தகைய
நிலையை எதிர்கொள்ளவும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்தார்.
.
இங்கிருப்பவர்கள் யாரும் கலைந்து செல்ல வேண்டாம்
நீங்கள் இருந்தால் மட்டுமே போராட்டம், நீங்கள் இல்லையேல் நாங்களும் இல்லை
போராட்டமும் இல்லை .என்று கூறி மக்களை உற்சாக படுத்த தொடங்கினார்.
.
மூன்று மணியளவில்,களத்தில் மக்கள் தொண்டாற்றிக்
கொண்டிருந்த இசுலாமிய இளைஞர்கள் இருசக்கர வண்டியில் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்..அவர்களுக்கு தகவல் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
.
அவர்கள் மட்டும் செல்லாமல் இருந்திருந்தால்
இந்திய அரசும் ஆர்.எஸ். எஸ் கூட்டமும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உட்புகுந்து
விட்டனர் என்று கூறி இசுலாமிய மக்களை இழிவுபடுத்தி இந்த வன்முறையின் போக்கை யே
மாற்றி இருப்பர்.
.
ஊடகத் துறையின் ஒளிப்படக் கருவிகள், கழிப்பறை என
ஒவ்வொன்றாக வெளியேறியதை காண முடிந்தது.சரியாக 4.05 மணிக்கு வண்டிகளில் வந்த காவல் துறையினர்ல் அணிதிரண்டு இருந்த கூட்டத்திற்கு எதிரே பெருமளவில் நிலை கொள்ள
தொடங்கினர்.
.
மாணவர் அணிக்கு எதிரே இருந்த காவல் துறையிடம் சென்ற மாணவ குழுவினர், அங்கிருந்த வடிவேல் சக்திவேல் என்ற உயர் அதிகாரியிடம் என்ன
நடக்கிறது என்று கேட்டதற்கு அவர், உங்கள்
கோரிக்கை நிறை வேறி விட்டது கலைந்து சென்று விடுங்கள் என்று கூறினார்..அதற்கு மாணவர்கள் சட்டசபையில் சட்டம்
நிறைவேறியவுடன் நாங்கள் கலை கிறோம் என்றனர் ..அதற்கு அவர் எல்லாவற்றுக்கும் ஒரு முறை (protocol) என்பது இருக்கிறது இன்று சட்டமன்றம் ஆளுநர் உரையோடு
கூடும். நாளை சட்டம் நிறை வேறும் என்றார்.
.
(ஆனால் அன்றே சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேறியதை
நாம் அறி வோம் பாராளுமன்றம் நாடாளுமன்ற உச்ச நீதி மன்றம் எதுவாயினும் மக்கள் போராட்டத்திற்கு முன் அடிபணிந்தே ஆக
வேண்டும் என்பதே நடைமுறை உண்மை)
.
அவ்வாறு களைவதற்கு மாணவர் ஒப்பவில்லை.காவல் துறை தனது முதல் தாக்குதலை கார்த்திக்
சுரேசு இடத்தில் இருந்து துவங்குவதற்கான ஆயத்த நிலைபாட்டை எடுக்க துவங்கியது.
.
கார்த்திக் சுரேசும் போர்களத்தை எதிர்கொள்ளும்
மன நிலைக்கு மக்களை கொண்டு வருவதற்கான முழக்கங்களை முன்னெடுத்தார்.அங்கு குழுமி யிருந்த.மக்களிடம் வலது
புறம் அமர்ந்துள்ள மக்கள் மட்டும் குரல் எழுப்புங்கள், அடுத்து இடது புறம்,பிறகு
நடுவில் அடுத்து பெண்கள் மட்டும் என்று கூறி அங்கு பெண்கள் இருப்பதை காவல் துறை
உணரும்ப டி செய்தார்.
ஒலிபெருக்கியில் இங்கு கருவுற்ற
தாய்மார்கள்,பெண்கள் ,குழந்தைகள், வயதானவர்கள் உள்ளனர்.என்பதை மீண்டும் மீண்டும் கூறி கொண்டிரு ந்தார். காவல் துறையை
சார்ந்தவர்களும் நம் நண்பர்க ள்தான் அவர்களுக்கும் தமிழின பற்று இருக்கிறது.அதனால்
அவர்கள் தடியடி நடத்த வாய்ப்பு இல்லை .ஒருவேளை அப்படி நடந்தால் இங்கிருப்ப வர்கள்
யாரும் அவர்களை எதிர்த்து தாக்க வேண்டாம்..வன் சொற்களில் திட்ட வேண்டாம்.நாம்
நடத்துவது அறவழி போராட்டமே. தமிழர்கள் அடி வாங்குவது ஒன்றும் நமக்கு புதிதல்ல
.சென்ற இடமெல்லாம் ,சென்ற நாடுகளெல்லாம் அடி வாங்கி இருக்கிறோம்.
இங்கு இந்த நேரத்தில் நம்மிடம் வலிமை இல்லை..வலிமையை பொறுத்து தான்
எதிர் தாக்குதல் என்பது நடத்தப் பட வேண்டும் .இப்பொழுது நாம் எதிர் நோக்கியுள்ள
பெரிய சவால். இங்குள்ள பெண்கள்,
குழந்தைகள், முதியவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இளைஞர்களாகிய நமக்கு உள்ளது
,அதனால் தாய்மார்களே நீங்கள் அச்சப்பட வேண்டாம் உங்கள் மீது ஒரு அடி கூட விழாமல் நாங்கள்
பாதுகாக்கிறோம் என்று கூறி மக்களுக்கு மன உறுதியை ஏற்படுத்தியவிதம் செயல்பட்ட
பாங்கு எத்தனை பாராட்டினாலும் தகும்.
அவரது தொடர்ச்சியான பேச்சை கேட்ட காவல் துறை தடியடி
நடத்தும் மனநிலையில் இருந்த சற்றே பின் வாங்கி ஐந்தரை மணியளவில்
கூட்டத்திற்குள் உட்புகுந்தனர்.அங்கு
கூடியிருந்தவர்களை கைகளால்
பிடித்து இழுத்து விட்டு கலைத்தனர் .கலைந்த மக்களை விரட்டினர் அவர்கள் கடற்கரையை
நோக்கி ஓடினர். .
அடுத்த தாக்குதல் விவேகானநதர் இல்லம் எதிரே
இருந்ந்த மாணவர் அமைப்பின் மீது நடந்தது.. காவலர்களிடம் இரண்டு மணி நேரம்
வாய்ப்பு கேட்டு ஏறு தழுவுதலுக்காக இயற்றப்பட்ட சட்ட விதி முறைகளை கேட்டறிந்து
பின்னர் முறைப்படி அறிவித்து கலைந்து செல்வதாக கூறிய மாணவர்களின் கூற்றை
கேளாமல் காவல் துறை அவர்களை அடித்து விரட்டியது.
(இனி காந்தி தேசத்தில் காந்தியவாதம் மிதவாதம்
என்று யாராவது முழங்குவர்)
இந்திய பேரினவாதம் இந்தியத்தின் மீது மாணவர்கள்
கொண்டிருந்த நம்பிக்கையை தகர்த்தது .தேசிய கீதம் பாடினர்,இந்திய கொடியை
போர்த்தினர்,வந்தே மாதரம் என்று முழங்கினர் ஆனால் காவலர் கையில் சுழன்ற தடி மட்டும்
ஓயவில்லை.
.
காவலர் தடிக்கு காந்திய,புத்தர் மொழியெல்லாம் புரியாது அதற்கு
தெரிந்த ஒரே மொழி வன்முறை உரிமை கேட்டு போராடுபவர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்,தேச துரோகிகள் என்று கூறி அடித்து உதைத்து கொல்வது. அதை உணர்ந்ததாலேயே குப்பத்து மக்கள் மாணவர்களை காக்க அவர்கள் மொழியிலேயே பதிலளித்தனர் .
மாணவர்களை காவல் துறை தாக்குவதை அறிந்த
பட்டினப்பாக்கம் மீனவ குப்பத்தை சார்ந்த மக்கள் காவல் துறையிடம் அவர்கள் மொழியில்
பேசினர்.
வழமை போல காலையில் மெரினாவை நோக்கி வரத்
தொடங்கிய மாணவர்களை பட்டினபாக்கம் ,நடுக்குப்பம் ,திருவல்லிக்கேணி போன்ற இடங்களில்
தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தி மாணவர்களை தாக்கியதால் மாணவர்களுக்கு
ஆதரவாக மக்கள் போராட தொடங்கினர்.
மாணவர்கள் இடையில் புகுந்த அதிமுக அரசு
பயங்கரவாதம்,,ஆர் எஸ் எஸ் பயங்கரவாதம் ,திராவிட கட்சிகளின் குண்டர் படை என
அனைவரும் இணைந்து அமைதிப் போராட்டத்தை வன்முறை போராட்டமாக மாற்றியதால் மக்களிடம் தோல்வி கண்டனர்.
மிதவாத முறையில் துவங்கி அரச
பயங்கரவாதத்தால் வன்முறையாக மாறியதே மாணவர்
புரட்சிக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது..
(குறிப்பு: :கார்த்திக் சுரேசு என்ற அந்த
இளைஞரின் செயல்பாடுகள் என்னை வெகுவாக ஈர்த்தன .என்பது மட்டுமல்லாமல் கார்த்திக் சுரேசு கூட்டத்தை கலைத்தவுடன் அங்கிருந்த நாங்கள் உடல் நலக் குறைபாட்டால் அங்கிருந்து ஆறு மணி பதினைந்து நிமிடத்திற்கு அங்கிருந்து புறப்பட்டு விட்டோம்.நான்பார்த்தவைகளை கேட்டவைகளை மட்டும் பதிவிட்டுள்ளேன் )
. .
Post a comment