தமிழினத் தேசியவாதிகள்,தமிழினப் பற்றாளர்கள் செயலலிதாவின் சாவிற்கு மகிழ்வதா அல்லது நீதி கேட்பதா ?

ஊழல் அரசியை, வாய்தா ராணியை, ,கொள்ளையடித்து சிறை சென்றவரின் சாவிற்காக மகிழாமல் அவரை ஆதரிக்கலாமா?, என்று இங்குள்ள தமிழ்தேசிய வாதிகள், நயன்மை வாதிகள் ,நேர்மையாளர்கள் ,பண்பாளர்கள் வினா தொடுக்கிறார்கள்.


செ.செயலலிதா  தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனை பெற்றெடுத்த பார்வதி அம்மாளா? அல்லது தமிழ்த் தேசியப் போராளி தமிழரசனைப் பெற்றேடுத்த தாயாரா ?


இந்த இனத்திற்கும் ,மண்ணிற்கும் ,மக்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இந்த தமிழினத்திற்காக அவர் என்ன செய்தது இருக்கிறார்ப லனை எதிர்பாராமல அவர் செய்தது ஏதேனும் உண்டா ? என்றேனும் நேர்மையாக செயல்பட்டு இருக்கிறாரா


.இரு திராவிட தலைவர்களின் தலை சாய்ந்தால் மட்டுமே  தமிழினம் அரியணை ஏறும் என்ற நிலையில் ஒரு தலை சாய்ந்ததர்காக மகிழாமல், விளக்கம் கேட்டு போராடுகிறார்களே என்று  தமிழினப் பற்றாளர்கள்மி  குற்றம் சாட்டுகிறார்கள்.


அவர்கள்த  ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும் இறந்தவர் ் செயலலிதா என்ற தனிப்பட்ட மனிதர் இல்லை .தமிழகத்தின் முதல்வர் மக்கள் வரிப் பணத்தில் மருத்துவ சிகிச்சைப் பெற்றவர் .,அவரது இறப்பில் ஐயம் இருப்பின் அதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழனின் உரிமை..


அதை தெளிவுப் படுத்த வேண்டியது, தமிழக, இந்திய அரசுகளின் கடமை


இதே காலத்தில் முன்னால் முதல்வர் கருணாநிதி,  இறந்து இருந்தால் நாம் அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்தி கேட்கப் போவது இல்லை.


மேலும் தமிழர்களை முட்டாளாக கருதி இரமணா திரைப்படத்தில் வருவது போன்று செத்த பிணத்திற்கு வைத்தியம் பார்த்து இருந்தால் அதை விட கேவலம் வேறு ஒன்றும் இல்லை.


பதவிக்காக ,பணத்திற்காக இதை மோடியும் ,சசிகலாவும் ,பன்னீர் செல்வமும் அரங்கேற்றி இருந்து அவர்களே தமிழகத்தை ஆளும் நிலை ஏற்பட்டால் நமது நிலை என்ன ஆகும் என்பதை சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும்எனவே கடந்த 75 நாட்களில் முதல்வர் படிநிலையாக குணமடைந்து   வந்ததாக அப்போலோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின் படி அவர் தொலைகாட்சிப் பார்த்து ,பொங்கல் உண்டு ,தேநீர் குடித்து, அமர்ந்து  நடக்க முயற்ச்சித்து,சிரித்து பேசி ஆலோசனை நடத்தி, என்று அப்போலோ நிர்வாகம் மற்றும் அ.தி.மு.க .தலைமை,  செயலலிதாவைப் பற்றி அறிவித்த ஒவ்வொரு நிகழ்வின் சான்றுகளையும் (CC-CAMERA) சி சி காமெராவின் ஒலிப்பதிவை ,காணொளியை வெளியிட வேண்டும்.

வெளியிடும் வரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் குரல் கொடுப்போம் அதுவரை இது போன்ற குற்றச் சாட்டுக்கள் மக்கள் மனதில் எழுவதை தடுக்க முடியாது      

(குறிப்பு : நாளை முதல்வர் தன்னை ஒளிப்பதிவு செய்வதை விரும்பவில்லை மூடிய மின்சுற்று தொலைகாட்சி(  CC CAMERA) வை  அகற்றச் சொன்னதால் அகற்றி விட்டோம்  என்று அப்போலோ நிர்வாகம் அறிவித்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை)   .


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget