தமிழா உன் தன்மானம் எங்கே ?அன்று செயலலிதா இன்று சசிகலா நடராசனா ?


செயலலிதாவிடம் அடிமை அரசியலை,அய்யோக்கிய அரசியலை ஊழல் அரசியலை மட்டும்  கற்றுத் தேர்ந்தவர் சசிகலா நடராசன் .அவர் தமிழகதிதின் முதலமைச்சராக வருவது தமிழன் தன் தலையில் தானே மண்ணை வாரி போடுவதற்கு சமம்.
 .
தமிழச்சி என்பதற்காக மீண்டும் ஒரு செயலலிதாவை உருவாக்கி விடக் கூடாது. அடுத்த அ.தி.மு.க. தலைமை என்பது தமிழின பண்பு சார்ந்துள்ள வராக இருத்தல் வேண்டும்.

செயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு, அஞ்சலி செலுத்த வந்த அதிமுக அமைச்சர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலா காலில் விழுந்து வணங்கி, மீண்டும் தமிழன் தன்மானத்தை அடகு வைக்கும்  அடிமை அரசியலை துவக்கி உள்ளனர்.இதை சசிகலாவும் தடுக்காமல் குருரமாக ரசிக்கிறார் எனில் இதில் உள்ள விளைவை  நாம்  
சற்றே   எண்ணிப் பார்க்க வேண்டும்..


அதிமுக வை நிறுவியவர் நிறுவனர் எம்.சி.ராமச்சந்திரன்.அதை யாராலும் மாற்ற முடியாது. அதனால் மட்டுமே செயலலிதா பொதுச் செயலாளர் பதவியைப்  கைப்பற்றி அதற்கு முழு ஆளுமையை கொடுக்கக் கூடிய வகையில் கட்சி சட்ட திருத்தத்தை திருத்தி கட்சியை கைப்பற்றினார் .

அதே முறையைப் பயன்படுத்தி சசிகலா நடராசன், துணை பொது செயலாளர் பதவியை கைப்பற்றி  செயலலிதா போல ஆளுமை செலுத்த முயற்சி செய்கிறார்.வரும் இடைத் தேர்தலில் ஆர். கே. நகர் தொகுதில் போட்டியிட்டு முதலவர் ஆகலாம் என்ற கனவில் சசிகலா குடும்பம் செயல் பட்டு வருகிறது.

அதிமுக வின் பொது செயலாளர் பதவியையும்,முதல்வர் பதவியையும் கைப்பற்றி அதிமுக வின் ஒட்டு மொத்த சொத்துக்களையும் கைப்பற்ற சசிகலா குடும்பம்  துடிக்கிறது.
   .
இது தமிழத்திற்கு பெரும் கேடாக முடியும்.மீண்டும் மிக அருவருப்பான
குடும்ப ஆட்சிக்கே வழி வகுக்கும்.


எனவே தமிழக எதிர்கட்சிகள் ஒன்று பட்டு, சசிகலா நிற்கும் இடை கைப்பற்றி தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும். .அவ்வாறு நடந்தால் பொதுச்செயலாளர் பதவியை அவரால் அடைய முடியாது.

ஓ.பி.பன்னீர் செல்வம் அவர்களே முதல்வராக நீடிப்பார். அல்லது வேறு ஒரு தமிழருக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.


இந்திய, திராவிடத்திடம் அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம் சிக்கி விடக் கூடாது. என்பதால் தமிழர் கட்சிகளும். தமிழ்தேசிய அமைப்புகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய காலமிது..

    

Post a Comment

1XBet
Betting in India. It can titanium ring be great to find 출장마사지 the most popular brands, especially ones that offer betting on sports such as septcasino football, tennis,  Rating: 1/10 · ‎Review by Riku ventureberg.com/ VihreasaariWhere 1xbet korean can I find 1xbet?Where can I find 1xbet betting?

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget