2016


செயலலிதாவிடம் அடிமை அரசியலை,அய்யோக்கிய அரசியலை ஊழல் அரசியலை மட்டும்  கற்றுத் தேர்ந்தவர் சசிகலா நடராசன் .அவர் தமிழகதிதின் முதலமைச்சராக வருவது தமிழன் தன் தலையில் தானே மண்ணை வாரி போடுவதற்கு சமம்.
 .
தமிழச்சி என்பதற்காக மீண்டும் ஒரு செயலலிதாவை உருவாக்கி விடக் கூடாது. அடுத்த அ.தி.மு.க. தலைமை என்பது தமிழின பண்பு சார்ந்துள்ள வராக இருத்தல் வேண்டும்.

செயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு, அஞ்சலி செலுத்த வந்த அதிமுக அமைச்சர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலா காலில் விழுந்து வணங்கி, மீண்டும் தமிழன் தன்மானத்தை அடகு வைக்கும்  அடிமை அரசியலை துவக்கி உள்ளனர்.இதை சசிகலாவும் தடுக்காமல் குருரமாக ரசிக்கிறார் எனில் இதில் உள்ள விளைவை  நாம்  
சற்றே   எண்ணிப் பார்க்க வேண்டும்..


அதிமுக வை நிறுவியவர் நிறுவனர் எம்.சி.ராமச்சந்திரன்.அதை யாராலும் மாற்ற முடியாது. அதனால் மட்டுமே செயலலிதா பொதுச் செயலாளர் பதவியைப்  கைப்பற்றி அதற்கு முழு ஆளுமையை கொடுக்கக் கூடிய வகையில் கட்சி சட்ட திருத்தத்தை திருத்தி கட்சியை கைப்பற்றினார் .

அதே முறையைப் பயன்படுத்தி சசிகலா நடராசன், துணை பொது செயலாளர் பதவியை கைப்பற்றி  செயலலிதா போல ஆளுமை செலுத்த முயற்சி செய்கிறார்.வரும் இடைத் தேர்தலில் ஆர். கே. நகர் தொகுதில் போட்டியிட்டு முதலவர் ஆகலாம் என்ற கனவில் சசிகலா குடும்பம் செயல் பட்டு வருகிறது.

அதிமுக வின் பொது செயலாளர் பதவியையும்,முதல்வர் பதவியையும் கைப்பற்றி அதிமுக வின் ஒட்டு மொத்த சொத்துக்களையும் கைப்பற்ற சசிகலா குடும்பம்  துடிக்கிறது.
   .
இது தமிழத்திற்கு பெரும் கேடாக முடியும்.மீண்டும் மிக அருவருப்பான
குடும்ப ஆட்சிக்கே வழி வகுக்கும்.


எனவே தமிழக எதிர்கட்சிகள் ஒன்று பட்டு, சசிகலா நிற்கும் இடை கைப்பற்றி தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும். .அவ்வாறு நடந்தால் பொதுச்செயலாளர் பதவியை அவரால் அடைய முடியாது.

ஓ.பி.பன்னீர் செல்வம் அவர்களே முதல்வராக நீடிப்பார். அல்லது வேறு ஒரு தமிழருக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.


இந்திய, திராவிடத்திடம் அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம் சிக்கி விடக் கூடாது. என்பதால் தமிழர் கட்சிகளும். தமிழ்தேசிய அமைப்புகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய காலமிது..

    

ஊழல் அரசியை, வாய்தா ராணியை, ,கொள்ளையடித்து சிறை சென்றவரின் சாவிற்காக மகிழாமல் அவரை ஆதரிக்கலாமா?, என்று இங்குள்ள தமிழ்தேசிய வாதிகள், நயன்மை வாதிகள் ,நேர்மையாளர்கள் ,பண்பாளர்கள் வினா தொடுக்கிறார்கள்.


செ.செயலலிதா  தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனை பெற்றெடுத்த பார்வதி அம்மாளா? அல்லது தமிழ்த் தேசியப் போராளி தமிழரசனைப் பெற்றேடுத்த தாயாரா ?


இந்த இனத்திற்கும் ,மண்ணிற்கும் ,மக்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இந்த தமிழினத்திற்காக அவர் என்ன செய்தது இருக்கிறார்ப லனை எதிர்பாராமல அவர் செய்தது ஏதேனும் உண்டா ? என்றேனும் நேர்மையாக செயல்பட்டு இருக்கிறாரா


.இரு திராவிட தலைவர்களின் தலை சாய்ந்தால் மட்டுமே  தமிழினம் அரியணை ஏறும் என்ற நிலையில் ஒரு தலை சாய்ந்ததர்காக மகிழாமல், விளக்கம் கேட்டு போராடுகிறார்களே என்று  தமிழினப் பற்றாளர்கள்மி  குற்றம் சாட்டுகிறார்கள்.


அவர்கள்த  ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும் இறந்தவர் ் செயலலிதா என்ற தனிப்பட்ட மனிதர் இல்லை .தமிழகத்தின் முதல்வர் மக்கள் வரிப் பணத்தில் மருத்துவ சிகிச்சைப் பெற்றவர் .,அவரது இறப்பில் ஐயம் இருப்பின் அதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழனின் உரிமை..


அதை தெளிவுப் படுத்த வேண்டியது, தமிழக, இந்திய அரசுகளின் கடமை


இதே காலத்தில் முன்னால் முதல்வர் கருணாநிதி,  இறந்து இருந்தால் நாம் அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்தி கேட்கப் போவது இல்லை.


மேலும் தமிழர்களை முட்டாளாக கருதி இரமணா திரைப்படத்தில் வருவது போன்று செத்த பிணத்திற்கு வைத்தியம் பார்த்து இருந்தால் அதை விட கேவலம் வேறு ஒன்றும் இல்லை.


பதவிக்காக ,பணத்திற்காக இதை மோடியும் ,சசிகலாவும் ,பன்னீர் செல்வமும் அரங்கேற்றி இருந்து அவர்களே தமிழகத்தை ஆளும் நிலை ஏற்பட்டால் நமது நிலை என்ன ஆகும் என்பதை சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும்



எனவே கடந்த 75 நாட்களில் முதல்வர் படிநிலையாக குணமடைந்து   வந்ததாக அப்போலோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின் படி அவர் தொலைகாட்சிப் பார்த்து ,பொங்கல் உண்டு ,தேநீர் குடித்து, அமர்ந்து  நடக்க முயற்ச்சித்து,சிரித்து பேசி ஆலோசனை நடத்தி, என்று அப்போலோ நிர்வாகம் மற்றும் அ.தி.மு.க .தலைமை,  செயலலிதாவைப் பற்றி அறிவித்த ஒவ்வொரு நிகழ்வின் சான்றுகளையும் (CC-CAMERA) சி சி காமெராவின் ஒலிப்பதிவை ,காணொளியை வெளியிட வேண்டும்.

வெளியிடும் வரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் குரல் கொடுப்போம் அதுவரை இது போன்ற குற்றச் சாட்டுக்கள் மக்கள் மனதில் எழுவதை தடுக்க முடியாது      

(குறிப்பு : நாளை முதல்வர் தன்னை ஒளிப்பதிவு செய்வதை விரும்பவில்லை மூடிய மின்சுற்று தொலைகாட்சி(  CC CAMERA) வை  அகற்றச் சொன்னதால் அகற்றி விட்டோம்  என்று அப்போலோ நிர்வாகம் அறிவித்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை)   .


தமிழக முதல்வரின் சாவில் ஏன் இத்தனை குளறுபடிகள்இயற்கை சாவா அல்லது படு கொலையா ?

தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசு,இந்திய அரசு மற்றும் வழக்காடு மன்றங்களுக்கு உண்டு .

தமிழக மக்கள் மனங்களில் எழும் ஏராளமான வினாக்களுக்கு விளக்கம் பெற வேண்டிய உரிமை தமிழக மக்களுக்கு உண்டு .

முழுமையாக குணமடைந்தார் என்று பொன்னையன் நே ர்காணல் கொடுத்த அன்றைய ஒளிப்படத்தை மட்டுமாவது வெளியிட வேண்டும்.

செ.செயலலிதாவின் புகைப் படத்தை வெளியிடக் கோரி டிராபிக் இராமசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் வழக்காடு மன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது .

மேலும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பல முறை வலியுறுத்தியும் செ.செயலலிதாவின் புகைப்படத்தைதமிழக அரசும் இந்திய அரசும் வெளியிடவில்லை . உயர்வ ழக்காடு மன்றமும் அதை வலியுறுத்தவில்லை .

எனவே முதல்வர் சாவில் தமிழக மக்களுக்கு எழுந்துள்ள ஐயத்தை தீர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இம் மூவருக்கும் உண்டு .

அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் தங்கி இருந்து சிகிச்சைப் பெற்ற எழுபத்தைந்து நாட்களில் மூடிய மின் சுற்று தொலைகாட்சி யில் (CC CAMERA) பதிவான ஒளிபடத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வேண்டும் .

அதுவரை தமிழக முதல்வர் செ. செயலலிதா அவர்களின் சாவு திட்டமிடப்பட்ட படு கொலையாகவே தமிழக மக்கள் கருத வேண்டியிருக்கும் .

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget